டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம், தண்ணீர் அமைப்பு சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் அருகில் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம் பாரத ரத்னா பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் உருவ சிலை முன்பு சந்தைக்கு வரும் பொழுது
துணிப்பையுடன் வாருங்கள் நெகிழிப்பை தவிருங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம் தலைமை வகித்தார். டீசல் பணிமனை மேற்பார்வையாளர், ஆர்.நாகநாதன், டீசல் சீனியர் தொழில்நுட்பர் எம்.ராஜதுரை, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், அரிமா பழனி, மேனாள் ரயில்வே சுவாமிநாதன், முத்துகுமார் உள்ளிட்டோர் துணிப்பை கொண்டு சுற்றுச்சூழலுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த சாலை ஓரமாக இருந்து நெகிழிப் பைகளை தவிர்ப்போம் சந்தைக்கு வரும்போது கையோடு துணிப்பை கொண்டு வாருங்கள் என விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம் பேசுகையில்,

திருச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்மலை சந்தை 1926-ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியின் போது தெற்கு ரயில்வேயால் தொடங்கப்பட்டது. பொன்மலை ரயில்வே பணிமனையில் பணிபுரிந்த தொழிலாளர்களின் குடும்பங்கள், அன்றாட வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வசதியாக உருவாக்கப்பட்ட இந்தச் சந்தை, தற்போது திருச்சி மக்களின் முக்கிய வாராந்திர வணிக மையமாகத் திகழ்கிறது. ரயில்வே ஊழியர்களுக்கு மாதத்தில் இரண்டு முறை ஊதியம் வழங்கப்பட்டதால், ஆரம்பத்தில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சந்தை கூடியது.விவசாயிகள் மாட்டு வண்டிகளில் காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுவந்து விற்றனர். தற்காலத்தில், அனைத்து வகையான காய்கறி, கனிகள்,மளிகைப் பொருட்கள், துணிகள், மண்பானைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் செல்லப்பிராணிகள், மீன் வகைகள் மற்றும் நாய் இனங்கள் வரை விற்கப்படும் பிரம்மாண்ட சந்தையாக விரிவடைந்துள்ளது.தற்போது வாரந்தோறும் ஞாயிற்று கிழமைகளில் காலை 6 மணி முதல் இரவு 8மணி வரை இயங்குகிறது.

பொன்மலை சந்தைக்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். சந்தைக்கு வருபவர்கள் நெகிழிப்பை தவிர்த்து துணிப்பையை கொண்டு வர வேண்டும் என்றார்.

செய்திகள் ; விஜயகுமார் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed