10.06.2026 (புதன்கிழமை) காலை 11.00 மணியளவில் GMC கிருஷ்ணகிரியில் அனுசரிக்கப்பட்டது. உலக கிளப் ஃபுட் தினத்தை முன்னிட்டு, அரசு கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் எலும்பியல் (Orthopaedics) துறை சார்பில் கிளப் ஃபுட் குறைபாடு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கிளப் ஃபுட் குறைபாட்டிற்கு வெற்றிகரமாக சிகிச்சை பெற்று பயனடைந்த 20 குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது சிகிச்சை அனுபவங்களையும், சிகிச்சையின் மூலம் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு டீன் டாக்டர் சத்தியபாமா அவர்கள் தலைமை தாங்கினார். அவர் கிளப் ஃபுட் சிகிச்சை பெற்று பயனடைந்த குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி, அவர்களையும் அவர்களது பெற்றோரையும் பாராட்டி வாழ்த்தினார். மேலும், குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும், கிளப் ஃபுட் குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதன் முக்கியத்துவம் குறித்து மருத்துவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சி பயனுள்ள முறையில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சந்திரசேகர், குடியிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வராஜ் மற்றும் எலும்பியல் துறைத் தலைவர் டாக்டர் மகேஷ்ராம், நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed