கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த தமிழ்நாடு விவசாய காங்கிரஸ் தலைமை கன்வீனர் சீனீவாசன் சாமிநாயுடு ஒரு நாள் ஒரு உதவி மூலம் தினத்தோறும் ஏதாவது ஒரு உதவி செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக 4229 நாளில் ஓசூர் எஸ்.பி.எஸ். மருத்துவமனை நிதியுடன், தினம் ஒரு நாள் உதவி நிறுவனரும் தமிழ்நாடு விவசாய காங்கிரஸ் தலைமை கன்வீனர் சீனீவாசன் சாமிநாயுடு, ஒசூர் மூதறிஞர் ராஜாஜி படித்த ஒசூர் ஆர், வி, எஸ், அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஆயிரம் மாணவர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கு அடையாள அட்டையாள அட்டைகள் வழங்கும் விழா மற்றும் இயற்கை அன்னையை பாதுகாக்கும் விதமாக கடிதம் எழுதும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஓசூர் எஸ்.பி.எஸ். மருத்துவமனை நிறுவன தலைவர் மருத்துவர் சுப்பிரமணியன் மற்றும் மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் பூபேஸ் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

ராஜாஜி படித்த இப்பள்ளியில் படிக்கும் ஆயிரம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழகத்தில் முதல் முறையாக அடையாள அட்டைகளை வழங்கிப் பேசும் போது…..
மாணவர் படித்தல் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும். ஆனால் படித்தால் மட்டும் போதாது, மாணவர்களிடையே ஒழுக்கம் என்பது முக்கியமானதாக உள்ளது. ஆகையால் மாணவர்கள் ஒழுக்கத்துடன் படித்தால் உங்களுடைய வாழ்க்கைத் தரம் உயரும் என்று குறிப்பிட்டார்.

அப்போது பள்ளியின் துணை தலைமை ஆசிரியர்கள் ரமேஷ், உமாபதி உள்ளிட்ட இருபால் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed