வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் கல்லேரி கிராமத்தில் 2018 ம் ஆண்டு பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட்ட 230 பட்டா வழங்கியும் கம்பி வேலியை நீக்கி பாதை மற்றும் அளந்து கல்நட்டு தரவில்லை என இந்திய குடியரசு கட்சி சார்பில் தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியில் நல ஆணையரிடம் இந்திய குடியரசு கட்சி வேலூர் மண்டல செயலாளர் இராசி. தலித் குமார் புகார் மனு அளித்தார்.

இது சம்பந்தமாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையர் அவர்கள் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு 15 நாட்களுக்குள் பிரச்சனைக்குரிய இடத்தை அளந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு விட்டுள்ளார்.

அந்த உத்தரவின் மீது நடவடிக்கை எடுத்து ஏழை எளிய மக்களுக்கு அவர்களுடைய இடத்தை மீட்டுக் கொடுக்கும் வகையில், அந்த இடத்தை சுற்றி ஆக்கிரமித்து செய்யப்பட்டுள்ள கம்பி வலிகளை அகற்றியும் பாதை அமைத்தும் கொடுக்க கோரி, வேலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உத்தரவு நகலை இந்திய குடியரசு கட்சி சார்பில் வழங்கினார்.

உத்தரவு நகலை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் தாழ்த்தப்பட்டோர் ஆணையர் வழங்கியுள்ள உத்தரவின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

செய்திகள் ; மூர்த்தி எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed