கிருஷ்ணகிரியில் அனைத்தும் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளை சார்பில் மாவட்ட அளவில் அரசு,தனியார் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மற்றும் உயர்கல்வி படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கும், ஆதரவற்ற உடல் நிலை பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் நலத்திட்ட உதவிகள், ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் துவங்கிய நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் சேகர் வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவினை மாநில செயலாளர் திருமதி.ஆனந்தி அப்பாதுரை குத்து விளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் மனோகர், மாநில துணை தலைவர் பன்னீர்செல்வம், ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார். மாநில துணை தலைவர் டாக்டர் பன்னீர்செல்வம், மாநில துணைச்செயலாளர் சேகர், மாநில பெருலாளர் தேவராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் மனோகரன், மாநில மக்கள் தொடர்ப்பு அலுவலர் இளவரசி மற்றும் மாவட்ட தலைவர்களான சுபாஷ் , நாகமணி, குமார், சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவரும், அமைப்பின் நிறுவனருமான எல்.அப்பாதுரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்தாண்டு 12 மற்றும் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த 8 மாணவ, மாணவிகளுக்கு தலா ஜந்து ஆயிரம், நான்கு ஆயிரம், மூன்று ஆயிரம், ஊக்க தொகையாகவும், கல்லூரில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் 4 பேருக்கு கல்வி உதவி தொகையும், ஆதரவற்ற மற்றும் உடல் நலன் பாதிக்கப்பட்ட 13 நபர்களுக்கு, தலா 4 ஆயிரம் மதிப்புள்ள உணவுப்பொருள் போன்றவற்றை மாநில தலைவர் அப்பாதுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட தலைவர் சுபாஷ் நன்றி கூறினார். இறுதியில் மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும், அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed