வேலூர் மாவட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக, விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப. மாணிக்க தாகூர் அவருக்கு பிறந்தநாள் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. டி. ஏ. நவீன் , ஓ .பி. சி. துறை, அவர் வழிகாட்டுதலின் பேரில், மாநில துணைத்தலைவர் ஜி .ஜலேந்தர், தலைமையில் மாநில செயலாளர் ஜ. கந்தன் மாநில தலைவர் நெசவாளர் அணி கோ.ஜெயவேல், முன்னிலையில் இன்று பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.


மேலும் இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் எஸ். மகாராஜன் மாவட்ட செயலாளர் ஏ .வி. மாசிலாமணி மாவட்ட துணை தலைவர் ஜி. விஜேந்திரன் மாவட்ட செயலாளர் எஸ் .தமிழரசன், சத்தியா, சரஸ்வதி, ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதியாக கோமதி, சாரதி ஆகியோர் நன்றி கூறினார்கள்.



பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கி சிறப்பாக பிறந்தநாளை கொண்டாடினார்கள். வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் பெரும்பாலும் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாவட்டச் செய்தியாளர் ; மூர்த்தி /எதிரொலி / 8939476777
