தமிழகத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கிருஷ்ணகிரி செந்தில் மெட்ரிக் பள்ளி, மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளது. அந்த பள்ளியில் பயின்ற சௌஜன்யா என்ற மாணவி மாநில அளவில் 499 மதிபெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

மாநில அளவில் சாதனை படைத்த மாணவிக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் கந்தசாமி, செயலாளர் தனசேகர் ஆகியோர் மாணவிக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கியும், பாராட்டினர்.

மேலும், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் இப்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. துவங்கப்பட்ட முதல் வருடத்திலேயே மாநில அளவில் சாதனை படைத்துள்ளது என பள்ளியின் செயலாளர் தனசேகர் அவர்கள் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி சௌஜன்யா கூறுகையில் மாநில அளவிலும் கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலும் 499 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன், இந்த மதிப்பெண்கள் எடுக்க உறுதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் தொடர்ந்து இப்பள்ளியில் 11-ம் வகுப்பில் கணிதம், அறிவியல் பாடப் பிரிவு எடுத்து படித்து மருத்துவர் ஆவதே எனது லட்சியம் என்று குறிப்பிட்டார்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed