புகார் மனு பெரும் கூட்டமாகவும் நடந்ததால், பொதுமக்கள் ஏராளமானோர் மனு அளித்தனர்

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தது. அதன் தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவி வகித்து பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக மருத்துவர் எம்எஸ் ரவி போட்டியிட்டார். பின்னர் காங்கிரஸ் அதிமுக வேட்பாளர்களை விட முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற பின் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று முதல் கட்டமாக தமக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இதில் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு தொடங்கி ஒன்பதாவது வார்டு வரை உள்ள பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சின்ன காவணம் கூட்டுச்சாலையில் நடைபெற்றது. இந்த கூட்டம் பொதுமக்களின் புகார் ஏற்க்கும் கூட்டமாகவும் நடைபெற்றதால் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினரிடம் புகார் மனுக்களை அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் ரவி விரைவில் இதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சிலம்பரசன் உள்ளிட்ட ஏராளமான தவெகவினர் இதில் கலந்துகொண்டனர்.

செய்திகள் : பழவை முத்து எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed