
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஆயிர வைசிய சபை திருமண மகாலில் ராமநாதபுரம் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு , ராமநாதபுரம் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் குப்தா ஆர்.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஹாஜி அஸ்மாபாக் ஏ.அன்வர்தீன், பரமக்குடி மருந்து வணிகர்கள் சங்க சில்லரை விற்பனை பிரிவு தலைவர் ஏ.எம்.இளங்கோவன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க மொத்த வியாபாரிகள் பிரிவு தலைவர் ஏ.ஆர். சுப்பிரமணியம் அனைவரையும் தனக்கே உரிய பாணியில் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் சி. நாகரெத்தினம் செயல் அறிக்கையினை வாசித்தார்.
கூட்டத்தில், அடுத்த 3 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் :
தலைவராக - குப்தா ஆர்.கோவிந்தராஜன், செயலாளராக - சி. நாகரெத்தினம், பொருளாளராக - எம். தமிழ்செல்வன் ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :
ஆன்லைன் மருந்து விற்பனை , போலி மருந்துகளின் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும்,
* உயிர் காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்கள், தள்ளுபடிகளை கட்டுப்படுத்த வேண்டுமெனவும் ,
* பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் வரும் 20-ந் தேதி (புதன்) நடைபெறவுள்ள அகில இந்திய கடை அடைப்பு போராட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட மருந்து வணிகர்கள் முழுமையாக கலந்து கொள்வதெனவும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ன .
தீர்மானங்களை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில தலைவர் எஸ். ஏ. ரமேஷ், கௌரவ பொதுச்செயலாளர் ஜி. அசோக், பொருளாளர் எம்.கணேசமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் எம். அருள்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்தி மாநில மருந்து கட்டுப்பாடு முன்னாள் அதிகாரி எம்.என்.ஶ்ரீதர், ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்கத்தலைவர் எஸ். ஜீவானந்தம், பரமக்குடி வியாபாரிகள் சங்கத்தலைவர் ராசி என்.போஸ், பொதுச்செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட மருந்து ஆர்.கோவிந்தராஜன்வணிகர்கள் சங்க மொத்த வியாபாரிகள் பிரிவு தலைவர் ஏ.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.


ராமநாதபுரம் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் எஸ். சுந்தரம் நன்றி கூறினார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
