தமிழ்நாட்டில் நடைபெற்ற 17 வது சட்டமன்ற தேர்தலில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்று இருப்பவர் ஜெகதீஸ்வரி, இவர் சிறுவயதில் இருந்து நடிகர் விஜய்யின் மீது பற்றுதலுடன் இருந்து வந்தவர், கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே விஜயினுடைய ரசிகர் மன்றம் மற்றும் அவருடைய நற்பணி மன்றங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பல நற்பணிகளை செய்து வந்து கொண்டிருந்தார். குறிப்பாக, தொடர்ந்து வருட கணக்கில் அன்னதானங்களை வழங்கியதும், பள்ளி மாணவ – மாணவிகளுக்கு மாலை நேர தொடர் வகுப்புகளும் விஜய் நற்பணி மன்றங்களின் சார்பில் நடத்தி வந்திருக்கிறார்.

அதை தொடர்ந்து இவர் தமிழக வெற்றி கழகத்தின், விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று மிகவும் ஈடுபாடுடன் மக்கள் பணியாற்றி வந்த அவரை, அக்கட்சியின் சார்பில், தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
அதனை தொடர்ந்து நேற்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் இவர் விருதுநகர் மாவட்ட பத்திரிகைகையாளராகவும் மிக சிறப்பாக தொடர்ந்து பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகள் : லெனின் லோகேஷ் எதிரொலி / 8939476777
