ஆதித்தமிழர் பேரவையின் சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் அதியமான் தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார், துணை பொதுச்செயலாளர் ஏ.டி.ஆர்.சந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டில் பட்டியல் சமூக உள் இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்று விஜய் தலைமையிலான அரசு முறையாக வகைப்படுத்த வேண்டும். அருந்ததியர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்ய, அவர்களுக்கெனத் தனித்துவமான ”சிறப்பு உட்கூறு திட்டத்தை” அரசு முறையாகச் செயல்படுத்த வேண்டும்.
முதல்வர் விஜய் பதிவியேற்பு விழாவில், தமிழக மரபை மீறி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மூன்றாவதாகப் பாடிப் புறக்கணித்ததை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஆதித்தமிழர் பேரவை என்றும் திமுகவின் உற்றத் துணையாகவும், போர்வாளாகவும் களத்தில் நிற்கும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சேலம் செய்தியாளர்
கா.தங்கதுரை/ 9442979467
எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed