ஜனவரி 1974 ல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டு, உலக செவிலியர் நாளை உலக நாடுகள் அனைத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரியில் உள்ள விஜய் இன்ஸ்டிட்யூட்டில் காமராஜர் கல்வி அறக்கட்டளை சார்பில் உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. விஜய் இன்ஸ்டிட்யூட்டின் நிறுவனர் துரை என்ற துரைசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவின் போது விஜய் இன்ஸ்டிட்யூட்டில் பயிற்சி பெற்று வரும் நர்சிங் மாணவிகளுக்கு உலக செவலியர் தின வாழ்த்தினை தெரிவித்து பூங்கொத்து மற்றும் இனிப்புகளை வழங்கிப்பேசும் போது, இன்று நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளினை செவலியர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம், இந்த அம்மையாரை போல நீங்களும் தன்னலம் பார்க்காமல் சமூகப்பணிகளில் சிறந்து விளங்கிட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது பேராசிரியை பிரியதர்ஷினி, ஆசிரியர் முகமது ஷரீப், அலுவலர் சத்யா உள்ளிட்ட நர்சிங் பயிற்சி மாணவிகளும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் தமிழ்செல்வன் நன்றி உரையாற்றினார்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed