தமிழ்நாட்டில் மக்களை மூளை சலவை செய்யும் பணியையும், ஒரு சில கட்சிகளையும், கட்சித் தலைவர்களையும் தரம் தாழ்த்தி சித்தரிக்கும் பணிகளை தமிழ்நாட்டில் ஒரு சில திரைமறைவு அரசியல்வாதிகளும், சில சுயநலவாதிகளும் திரைமறைவில் இருந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களையும், தமிழ்நாட்டு அரசியலையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதன் அடிப்படையில், தேர்தலுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில், திமுக அல்லது அதிமுக யார் ஆட்சி அமைத்தாலும் அதில் தங்களுடைய பங்கு இருக்க வேண்டும் என திட்டமிட்ட பாஜக, அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், தமிழ்நாட்டு தேர்தலின் முடிவு வேறு மாதிரியாக இருந்திடவே, உடனடியாக, அதிமுகவை உடைத்து அதில் ஒரு தரப்பினரை தவெக கட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தேர்தலில் தவெக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலையில், அந்த கட்சித் தலைவர் விஜய் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, அவர் ஆட்சி அமைப்பதற்கு உதவியாக விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்கியுள்ளனர்.
இதை தங்களுடைய ஏமாற்றமாக நினைத்துக் கொண்ட ஒரு சில திரை மரபு அரசியல் சக்திகள் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு சில கட்சிகளுக்குள் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில், பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தான் இரண்டு தினங்களாக விசிக கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை முதல்வராக தேர்வு செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்ற என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டு அதில் சில விஷமத்தனமான புரளிகளையும் சித்தரித்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்த பிரச்சனை குறித்து, விசிக கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார் அதில், அவர் கூறியிருப்பதாவது ;
இன்று செய்தியாளர்கள் சிலர் என்னை சந்தித்தார்கள். அப்போது பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள். அப்போது, “தங்களை முதல்வராக்க நடந்த முயற்சியை காங்கிரஸ் முறியடித்து விட்டதாக சொல்கிறார்களே” என்று ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்கு நான், “அப்படியொரு முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்தது” என்று பதிலளித்தேன்.
எனக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் என்னை அணுகி அதைப் பற்றி பேசினார்கள் என்பதையே கூறினேன். ” திமுகவோ, அதிமுகவோ அதிகாரபூர்வமாக யாரும் என்னை அப்படி அணுகவில்லை. நானும் யாரிடமும் பேசவில்லை, நேற்றும், இன்றும் இது குறித்து ஊடகங்களில் உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தான், அவ் வினாவுக்கு நான் விளக்கமளித்தேன்.” ஆனால், அதனை வேறு பொருள்படும்படி தலைப்பிட்டு செய்திகளை பரப்பி பரபரப்பை ஏற்படுத்துவது ஊடக அறமில்லை.

தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மையாகும்.
இந்தியாவில் உத்தரபிரதேசம், ஆந்திரா, மகாராஷ்ட்ரா, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலித்துகள் முதலமைச்சர்களாக ஆட்சி பீடத்தில் கோலோச்சிய வரலாறு நடந்தேறியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு நூறாண்டானாலும் அது கனவாகவே இருக்கும் என்பதை அறிந்தவன் நான்.
எனினும், இன்றைய அரசியல் சூழலில் அப்படியொரு பேச்சு நடந்ததாக சொல்லப்பட்டது. ஆகவே, “எனக்கும் தகவல் கிட்டியது” என்று ஒரு ஊடகப் பணியாளரின் கேள்விக்கு நான் விடையளித்தேன். அதனை திரித்து “பிறிதொரு பொருளைத்தரும் உள்நோக்கத்தோடு” ஒருசில ஊடகங்கள் செய்திகளைப் பரப்புவது வேதனையளிக்கிறது. என அவர் கூறியுள்ளார்.

எதிரொலி / 8939476777
