திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தத்தைமஞ்சியில் 100 நாள் வேலை வழங்காததால் கிராம பெண்கள் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்து முற்றுகையில் ஈடுபட்டனர். நீண்ட நாட்களாக அங்குள்ள பெண்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படவில்லை எனவும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணிகளில் ஒரு குறிப்பிட்ட சில பேர் மட்டுமே செய்வதால் மற்றவர்களுக்கு பணி கிடைக்காத அதிருப்தியில் உள்ளதாக கூறி 100 நாள் வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்பு அதிகாரிகள் வந்து அவர்களை சமாதானம் செய்தனர். இறுதியாக மீஞ்சூர் வட்டார வளர்ச்சி தனி அலுவலர் மணி சேகர் பெண்களை அழைத்து பேசி சமரசம் செய்தார். இதனால் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்திகள் : பழவை முத்து எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed