உலக அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, அன்னையின் அன்பு, தியாகம் மற்றும் கவனிப்பைப் போற்றும் வகையில் உலக அன்னையர் தினம் உலகெங்கிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 1908-ல் அன்னா ஜார்விஸ் என்பவரால் அமெரிக்காவில் இது தொடங்கப்பட்டது. மக்கள் தங்கள் தாய்மார்களுக்கு மலர்கள், பரிசுகளை வழங்கி, சிறப்பு உணவுகளை சமைத்து, அவர்களுடன் நேரத்தை செலவிட்டு அன்பை வெளிப்படுத்துகின்றனர். “தாயிற் சிறந்த கோவிலும் இல்லை” என்ற பழமொழிக்கு ஏற்ப, குடும்பத்தில் தாய்மார்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாளாக இது அமைகிறது. உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி நகர தமிழக வெற்றி கழகம் மற்றும் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கம் சார்பில் ராசு வீதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு கேக் வழங்கப்பட்டது.

நுகர்வோர் சங்க மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த அன்னையர் தின விழாவில் கிருஷ்ணகிரி நகர நிர்வாகி கணேசன், வார்டு உறுப்பினர்களான ஹரி, தேவா, ஜாவித், ஸ்ரீநாத் மற்றும் நுகர்வோர் சங்க நிர்வாகியான விஜயகுமார், ஹரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed