மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் மேல் நாச்சிகுளம் கரட்டுப்பட்டி பகுதியில் முல்லை பெரியார் பாசனம் மூலம் விளைந்த நெல்மணிகள் மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது கடந்த 45 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு பணம் பட்டுவாடா செய்ய வில்லை என்று விவசாயிகள் திருமங்கலம் திண்டுக்கல் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 600 ஏக்கர் நிலத்தில் விளைவிக்கப்பட்ட நெல் மணிகள் 50 ஆயிரம் மூட்டை கொள்முதல் செய்து கடந்த 45 நாட்களுக்கு மேலாக பணம் வழங்காத காரணத்தால் விவசாயிகள் சாலை மறியல் செய்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை மாறாக போனை எடுப்பது கூட கிடையாது என்று விவசாயிகள் புலம்புகின்றனர் இதனால் கோபம் அடைந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது இது குறித்து தகவல் அறிந்த சோழவந்தான் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் உடனடியாக பணத்தை விடுவிக்க வேண்டும் அப்பொழுதுதான் கலைந்து செல்வோம் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed