நாடு நலம் பெற வேண்டியும், தமிழகத்தில் வளமான எதிர்காலம் உருவாகி மக்கள் சுபிட்சமுடன் வாழ வேண்டியும், மதுரையைச் சேர்ந்த கோகுல் என்ற வாலிபர் கன்னியாகுமரி முதல் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு நடைபயணமாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கடந்த ஆண்டு ஏப்ரல் 23 முதல் துவங்கிய இந்த நடைபயணம் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடை பயணம் மேற்கொண்டார்.

இன்று கிருஷ்ணகிரி வழியாக செல்லும்போது, சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளரும், தேசியவாத மக்கள் கட்சியின் மாவட்ட தலைவருமான டாக்டர் சந்திரமோகன் அவருக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
அப்போது உடன் தேசிய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீனிவாசன், பாஜகவை சேர்ந்த கார்த்தி, தேமுதிக ஒன்றிய செயலாளர் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777
