
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தனி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் மதுரை சோழவந்தான் தனி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் 19 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் எம் வி கருப்பையா தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெங்கடேசனை2678 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

தமிழக வெற்றி கழக வேட்பாளர் கருப்பையா 63 907 வாக்குகளும் திமுக வேட்பாளர் வெங்கடேசன் 61,229 வாக்குகளும் பெற்றுள்ளனர்
அதிமுக வேட்பாளர் மாணிக்கம் 49,494 வாக்குகள் பெற்றுள்ளார் நாம் தமிழர் வேட்பாளர் நாகலட்சுமி 10,430 வாக்குகளும் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் டாக்டர் பாலமுருகன் 2091 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற எம்பி கருப்பையா வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் பெற்றுக் கொண்டார் அப்போது தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் விஷால் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர் சோழவந்தான் தொகுதியில் வெற்றி பெற்ற எம்வி கருப்பையா ஏற்கனவே கடந்த 2011 முதல் 16 வரை அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகம் சார்பில் இரண்டாவது முறையாக எம்எல்ஏஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .

சான்றிதழை பெற்று வெளியில் வந்த எம் வி கருப்பையாவுக்கு தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் பின்பு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
செய்திகள் : காளமேகம் எதிரொலி /. 8939476777
