சேலம் தாதம்பட்டி அம்பேத்கார் நகரில் கட்டுமான தொழிற்சங்கத்தின் சார்பில் மே தின விழா நடைபெற்றது. விழாவில், அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் சேலம் வீராணம் அருகில் சின்னனூர் அன்பு இல்லத்தில்  மதிய உணவு வழங்கினார். 
இதில் இந்திய குடியரசு கட்சி மாநில தொழிற்சங்க செயலாளர் சேலம் கேபிள் மாரியப்பன் தலைமை வகித்தார். மாநில தொழிற்சங்க செயலாளர் கேபி சின்னண்ணன் முன்னிலை வகித்தார்.  

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தொழிற்சங்க பொறுப்பாளர் டி.எம். சுந்தரம், மாவட்ட தொழிற்சங்க பொறுப்பாளர் மிலிட்டரி மகேந்திரன், இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த தனபால், குபேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சேலம் வீராணத்தில் தமிழ்நாடு குடியரசு தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற மே தின விழாவில் அம்பேத்கர் சிலைக்கு இந்திய குடியரசு கட்சி மாநில தொழிற்சங்க செயலாளர் சேல ம் கேபிள் மாரியப்பன் மாலை அணிவித்தார். கே.பி. சின்னண்ணன் தலைமை வகித்தார். இந்திய குடியரசு கட்சியினர் கலந்துகொண்டனர். 

சேலம் செய்தியாளர் கா.தங்கதுரை / 9442979467 எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed