மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் தமிழகத்தின் மாரியம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் 17 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். தீச்சட்டி பால்குடம் பூக்குழி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செலுத்தி செல்வர். கடந்த பங்குனி மாதம் 3 மாத கொடி ஏறிய நிலையில் வியாழக்கிழமை காலை திருக்கோவில் முன்பாக அர்ச்சகர் சண்முக வேல் சிறப்பு பூஜைகள் செய்து முகூர்த்தக்கால் நடப்பட்டது. எதிர்வரும் 18 ஆம் தேதி முதல் திருவிழா நிகழ்வுகள் தொடங்க உள்ளன.

முன்னேற்பாட்டு பணிகளை திருக்கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர். முகூர்த்த கால் நடும் விழாவில் சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வாடிப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் பால்பாண்டியன் பேரூராட்சி கவுன்சிலர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் உபயதாரர்கள் பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed