திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட பழவேற்காடு லைட் ஹவுஸ் கிராமத்தில் 240க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் ஊர் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதை அடுத்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது கிராம நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாக தெரிகிறது. இதனால் ராஜ்கமல் குடும்பத்தினர்,சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகியதை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் கடந்த ஆண்டு இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் மேற்கொண்டனர்.இதனால் ராஜ் கமல் குடும்பத்தினர் மீண்டும் தங்கள் கிராமத்திற்கு திரும்பினர்.

இந்த நிலையில் தொடர்ந்து ராஜ்கமல் ஊர் கட்டுப்பாட்டை மீறி நடப்பதாகவும் தவறுகளை சுட்டிக்காட்டும் நபர்கள் மீது பொய் புகார் அளித்து தங்களை வம்புக்கு இழுப்பதாகவும் எனவே அவர் குடும்பத்தினர் தொடர்ந்து பிரச்சினைகள் செய்து வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் ஒன்று திரண்டு பொன்னேரி வருவாய் கோட்டாட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதற்காக பழவேற்காட்டில் உள்ள மேம்பாலம் வரை ஊர்வலமாக வந்து அங்கிருந்து வாகனங்கள் மூலம் பொன்னேரிக்கு புறப்பட்டனர்.

அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் அனுமதி இன்றி கூட்டமாக செல்லக்கூடாது என வலியுறுத்திய பின்னரும், அதனை பொறுப்பெடுத்தாமல் லைட் ஹவுஸ் கிராம பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை வேன்களில் பொன்னேரி நோக்கி புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ரவிச்சந்திரன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை முடிவில் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் அளித்த நம்பிக்கையின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

செய்திகள் : பழவை முத்து எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed