சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு தினம் மற்றும் பணிநியமன ஆணை வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லுரி அறக்கட்டளையின் செயலாளர் முனைவர் ஜெ.குமார் தலைமை வகித்தார். ளசிறப்பு விருந்தினர்களாக சென்னையைச் சேர்ந்த டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தின் கல்வி கூட்டாண்மை குழுமத்தின் தலைவர் முனைவர் சுசீந்திரன், சென்னையைச் சேர்ந்த ராக்கெட் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் மோகன்பாபு பாலச்சந்திரன், பெங்களூரைச் சேர்ந்த எச்சிஎல் டெக் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் முனைவர் தனசேகரன் ராதாகிருஷ்ணன் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த குவெஸ்ட் குளோபல் நிறுவனத்தின் பல்கலைக்கழக உறவுகள் மற்றும் மேம்பாட்டு கவுன்சில் தலைமை நிர்வாகி எஸ்.தீபக்குமார் ஆகியோர் இறுதி ஆண்டு பொறியியல் மற்றும் மேலாண்மை துறை மாணவர்கள் 700க்கும் மேற்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர்.

கல்லூரி  அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவரும், கல்லூரியின் செயல் தலைவருமான முனைவர் பிஎஸ்எஸ்.சீனிவாசன், கல்லு£ரி முதல்வர் முனைவர் கே.விசாகவேல், வேலைவாய்ப்புத் துறை இயக்குனர் முனைவர் பி.ராஜேந்திரன், நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளையின் பொருளாளர் ஏ.சுரேஷ்குமார், செயற்குழு உறுப்பினர் செங்கோட்டுவேல், மேலாண்மைத் துறை இயக்குநர் முனைவர் ஸ்டீபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள், கல்லுரி அறக்கட்டளை உறுப்பினர்கள், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சேலம் செய்தியாளர் / கா.தங்கதுரை / 9442979467 எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed