மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட திருமால் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள் இவரது தங்கை மகன் ஜீவா தமிழக வெற்றிக்கழக நிர்வாகியாக இந்த பகுதியில் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 23 ம் தேதி 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் நடைபெற்ற நிலையில் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட திருமால் நத்தம் வாக்காளர்கள் வாக்களிக்க கூடிய வாக்குச்சாவடியில் முனியம்மாள் என்பவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக, திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்ததாக கூறப்படுகிறது. மேலும், வாக்களித்து விட்டு வீட்டிற்கு வந்த தனது பெரியம்மா முனியம்மாவை அவரது அக்கா மகன் ஜீவா யாருக்கு நீ ஓட்டு போட்டாய் என்று கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்து உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டி திமுகவின் சின்னமான உதயசூரியனுக்கு வாக்களித்ததாக கூறியுள்ளார். அதனால், ஆத்திரம் அடைந்த முனியம்மாளின் தங்கை மகன் ஜீவா, தனது பெரியம்மாவை திருமால் நத்தத்தின் பல்வேறு பகுதிகளில் ஓட, ஓட விரட்டி தாக்கியுள்ளார்.

அதனால், பயந்து சோழவந்தான் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த முனியம்மாள் தன்னை ஓட, ஓட விரட்டிய, தனது தங்கை மகன் மீது மிகுந்த ஆத்திரத்தில் சோழவந்தான்
காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து புகாரை வாபஸ் பெற கூறி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் நிலையில் யாருக்கு வாக்களித்தோம் என்று யாரும் தெரிவிக்க கூடாது என்ற தேர்தல் கமிஷனர் விதிமுறைகளை மீறி, தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் விசில் சின்னத்திற்கு வாக்களித்ததாக சமூக வலைதளங்களில் கூறிவரும் நிலையில்,

திமுகவிற்கு வாக்களித்ததாக கூறிய தனது பெரியம்மாவை ஓட, ஓட விரட்டி தாக்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே குழந்தைகளிடம் தேர்தல் சம்பந்தமாக தேர்தல் விதிகளை மீறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் மீது கோவை காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் அளித்துள்ள நிலையில், தற்போது மாற்று கட்சிக்கு வாக்களித்த தனது சொந்த பெரியம்மாவை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோழவந்தான் தொகுதி பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed