மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனுறை திருமூலநாதசுவாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி கண்ணன் என்ற பரசுராமன் சிவாச்சாரியார் அர்ச்சகர் செந்தில் சிறப்பு பூஜைகள் செய்து முகூர்த்த கால் நடப்பட்டது. தொடர்ந்து 26 ஆம் தேதி முதல் சுவாமி அம்பாள் நந்தி குதிரை யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற உள்ளது. 28 ம் தேதி திருக்கல்யாண வைபவம் 29ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

30 ம் தேதி வியாழக்கிழமை வைகை ஆற்றில் தீர்த்த வாரி உற்சவம் நடைபெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக அதிகாரி கார்த்திகை செல்வி தக்கார் மாலதி ஆய்வாளர் சாவித்ரி வைத்தியநாத சுப்பிரமணி ஐயர் குடும்பத்தார்கள் கோபால ஐயர் குடும்பத்தார்கள் ஆலய பணியாளர்கள் விழா கமிட்டியினர் மற்றும் தென்கரை கிராமத்தார்கள் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed