முதல் நாள் அன்னையின் தேர்பவனி,
திரளான பக்தர்கள் பங்கேற்று நேர்த்தி கடன்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் அமைந்துள்ள பழமை வாய்ந்த புனித மகிமை மாதா திருத்தலத்தில் 548ம் ஆண்டு பெருவிழா கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.

9 நாட்கள் நவநாள் மன்றாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் 10 வது நாளான சனிக்கிழமை திருத்தல அதிபர் வர்கீஸ் ரொசாரியோ தலைமையில் மதுரவாயல் புனித தூய அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை ஆண்ரு முன்னிலையில் கூட்டு திருப்பலி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று இரவு 11 மணி அளவில் புனித மகிமை மாதாவின் திருத்தேர் பவனி நடைபெற்றது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிருஸ்துவமக்கள் மற்றும் பழவேற்காடு,சென்னை, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆலயத்தில் வழிபட்டு பின்பு ஏழு தேர்களுடன் அன்னையின் திருத்தேரை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

அப்போது மரியே வாழ்க மரியே வாழ்க என்ற கோஷத்துடன் பக்தர்கள் உப்பு,பொறி,மிளகு தூவி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
செய்திகள் : பழவை முத்து எதிரொலி / 8939476777
