இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 நடைபெறவுள்ளதையொட்டி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (ஹெலிபேடு அருகில்)  வாக்களிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக வாக்காளர் விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணியை பச்சை கொடியசைத்து துவக்கி வைத்து, பேரணியில் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    
அது சமயம் , மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர நாராயணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், வளர்ச்சி கூடுதல் ஆட்சியர்  திவ்யான்ஷீநிகம் ஆகியோர் உடனிருந்தனர்.
    
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறவுள்ளது. பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் தொடர்பாகவும், 100 சதவீதம் வாக்களித்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு அரசு துறைகள் இணைந்து விழிப்புணர்வு பேரணிகள், வாக்காளர் உறுதிமொழி , பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஹெலிபேடு அருகில் காவல் துறை, மகளிர் திட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் அலுவலர்கள், பணியாளர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இணைந்து நடத்திய வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
பேரணியில் பங்கேற்றவர்கள் வாக்களிப்பதன் அவசியம் தொடர்பாகவும், 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாகவும் பேரணியாக நடை பயணமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பேரணியானது ஹெலிபேடு அருகில் தொடங்கி டி பிளாக் பகுதிக்கு சென்று நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு , மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஸ்குமார் , மோட்டார் வாகன ஆய்வாளர் தங்கராஜ் , உதவி திட்ட அலுவலர்கள் ராஜா முகம்மது , தங்கபாண்டியன், செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ. பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் , அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர். எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed