மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தோடனேரியை அடுத்த மூலக்கூறிச்சி ரோட்டில் உள்ள வயலூர் கண்மாயில் கடந்த சில நாட்களாக ராட்சத ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு பல்வேறு லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது. கண்மாயில் உள்ள கருவேல மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கனரக வாகனங்களில் ஏற்றப்படுகிறது.

இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், திடீரென இந்த பகுதி கண்மாயில் கருவேல மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டும், அளவுக்கு அதிகமான வாகனங்களில் ராட்சத ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மணல் அள்ளப்பட்டும் வருகிறது.

இது, மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

மேலும், விவசாயிகளுக்கு மற்றும் விவசாய நிலங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் மணல் அள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கண்மாயில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed