கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்காரின் 135 வது பிறந்த நாளினை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆலப்பட்டி காலனியில் கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர் காங்கிரஸ் கட்சி சார்பில் மாணவர்கள் இரவு நேரங்களில் தடை இன்றி விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்ள உயர்தர ஃபோகஸ் மின்விளக்குகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் போது ஆலப்பட்டி காலனிப்பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இரவு நேரங்களில் தடையின்றி விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக உயர்தர ஃபோகஸ் மின்விளக்குகள் வழங்கி உற்ச்சாகப்படுத்தப்பட்டது.
மேலும் இந்த விழாவின் போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயசீலன், தனசேகரன், டாக்டர் ஜான், நஞ்சுண்டன் அப்பாஸ் பேக், மஞ்சுநாத், கண்மணி, திம்மராஜ் மற்றும் மாணவர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777
