குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு மதுரையில் அதிர்ச்சி சம்பவம்…

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திர வெள்ளாளபட்டி ஊராட்சி பகுதியில் உள்ள மலை பகுதியில் சட்டவிரோதமாக மணல் குவாரி செயல் பட்டு வருவதாகவும் , பாறைகளை வெடி வைத்து தகர்த்து கல்குவாரியும் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென மதுரை நத்தம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பானது.

வைத்தி என்ற பெயரில் ரூ. 90 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மணல் குவாரி உரிமம் 2 ஹெக்டேரில் உரிமம் பெற்ற நிறுவனம் 5 ஹெக்டேர் அளவு மலையை குடைந்து வெடி வைத்து தகர்த்தும் சட்டவிரோதமாக குவாரி நடத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி அனுமதியை ரத்து செய்ய கோரி பல முறை பாலமேடு காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குவாரி உரிமத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் எனவும்
ரத்து செய்யவில்லை யெனில் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.

போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

செய்திகள் : காளமேகம் / மதுரை /எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed