சேலம் குகை ரோட்டரி சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சேலம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் சேலம் குகை தேவாங்க மகாஜன கல்யாண மண்டபத்தில் 33 ஆம் ஆண்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் காயத்ரி லோகநாதன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் வி.சிவக்குமார் கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டார்.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை முகாம் ஆலோசகர்கள் குணசீலன், சௌந்தர்ராஜன், முகாம் அமைப்பாளர்கள் அருண்குமார், விக்னேஷ், ரவிச்சந்திரன் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்த முகாம் குறித்து சேலம் குகை ரோட்டரி சங்கத் தலைவர் காயத்ரி லோகநாதன் கூறுகையில், இந்த முகாமானது கடந்த 33 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும், இந்த முகாம் வாயிலாக இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கண் பரிசோதனை செய்துள்ளனர் எனவும், அவர்களில் சுமார் 7000க்கும் மேற்பட்டவர்கள் கண் அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். இன்று நடைபெற்ற இந்த முகாமில் காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர் என தெரிவித்தார்.


சேலம் / செய்தியாளர் / கா.தங்கதுரை 9442979467 / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed