மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் நாகமலை அடிவாரப் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்து ஆங்காங்கே மலைப்பகுதிகளில் கீழே கிடக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதியில் சோழவந்தானில் இருந்து செக்கானூரணி செல்லும் முக்கிய சாலையில் மேலக்கால் அருகே கணவாய் கருப்புசாமி கோவில் உள்ளது இந்த பகுதியில் நாகமலை அடிவாரப் பகுதியாக உள்ள நிலையில் இந்த பகுதியில் சாலை ஓரங்களில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பகுதியில் ஆங்காங்கே 20க்கும் மேற்பட்ட ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்து மலைப்பகுதிகளில் கீழே கிடக்கிறது.

குறிப்பாக, சில ஆடுகள் கழுத்து தனியாக வெட்டப்பட்டு சில ஆடுகளுக்கு கால்கள் இல்லாமல் சில ஆடுகள் இறந்து பல நாட்கள் ஆன நிலையில் எலும்பு கூடாக
துர்நாற்றம் வீசி கிடப்பதால் ஆடுகளின் இறப்புக்கு காரணம் என்ன என பொதுமக்கள் மற்றும் பகுதி மக்களிடையே கடும் சந்தேகத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

மொத்தமாக ஆடுகளை வளர்ப்பவர்கள் உணவில் விஷம் கலந்ததால் இறந்துவிட்ட நிலையில் புதைப்பதற்காக கொண்டு வந்து மலைப்பகுதியில் வீசி சென்று விட்டனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பொதுமக்கள் சந்தேகம் கிளப்புகின்றனர்.

இந்த பகுதியில் ஆடுகள் மொத்த கூட்டமாக மேய வரும்போது விலங்குகள் பிடித்திருந்தாலும் ஒன்று அல்லது இரண்டு ஆடுகளைத் தான் பிடித்து செல்லும் அதுவும் மலைப் பகுதிகளுக்குள் கொண்டு சென்று விடும் சாலைகளின் ஓரங்களில் வீசி செல்ல வாய்ப்பு இல்லை, ஆகையால் ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்ததற்கான காரணம் என்னவென்று காவல்துறையினர் விசாரணை செய்ய வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சில ஆடுகள் இறந்து பல நாட்கள் ஆன நிலையில் துர்நாற்றம் வீசி வருவதால் இந்த பகுதியில் செல்லக்கூடிய பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் ஆபத்து இருப்பதாக பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உடனடியாக இறந்து கிடக்கும் ஆடுகளை அப்புறப்படுத்த வேண்டும் ஆடுகளின் இறப்பிற்கு உண்மையான காரணம் என்பதை என்ன என்பதை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்திகள் : காளமேகம் / மதுரை /எதிரொலி / 8939476778

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed