இந்தியா, வெளிநாடுகளைச் சேர்ந்த 460 வீரர்கள் பங்கேற்பு…

நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி உடற்கல்வித் துறை நடத்தும் 3-வது சர்வதேச தரவரிசை சதுரங்கப் போட்டி நேற்றுத் தொடங்கி (FIDE) நாளை 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தூய சவேரியார் கல்லூரி பாடகர் குழுவினர் இறைவணக்கம் பாடினர். விளையாட்டுப் பிரிவு இயக்குனர் அருட்தந்தை பெர்க்மான்ஸ் அடிகளார் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில் தூய சவேரியார் கலைமணிகளின் அதிபர் தந்தை முனைவர் அருட்தந்தை எஸ். இன்னாசிமுத்து அடிகளார் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலர் முனைவர் அருட்தந்தை எஸ்.லாசர் தொடக்க உரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் அருட்தந்தை காட்வின் ரூபஸ் அடிகளார், துணை முதல்வர் முனைவர் ஏ.லூர்துசாமி, டி.என்.எஸ்.சி.ஏ. துணைத் தலைவர் எம்.எஹ்ரைம், டி.டீ.சி.டீ.ஏ. தலைவர் டாக்டர் அந்தோணி ராஜ் மற்றும் திருநெல்வேலி மாவட்ட சதுரங்க. ஐ.ஏ.முருகானந்தம், செயலாளர் தாஜூடின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித்துறை இயக்குனர் மற்றும் துறைத் தலைவர், முனைவர் எஸ்.ஆறுமுகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிறைவாக சதுரங்கப் போட்டியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தூய சவேரியார் கல்லூரியின் உடற்கல்வித் துறைத் தலைவருமான முனைவர் எஸ்.அதிசயராஜ், நன்றி கூறினார்.
அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு (AICF) மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகத்தின் (TNSCA) அங்கீகாரத்துடன் நடைபெறும் இப்போட்டியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 460 க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள், நடுவர் பெருமக்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றுள்ளனர்.

இச்சதுரங்கப் போட்டியின் விழா ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை இயக்குநரும், சதுரங்கப் போட்டியின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் வி.குமார் மற்றும் உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் முனைவர். செல்வராஜா, முனைவர். தங்கராஜ், அருணாச்சல வடிவு, நடராஜன் ஆகியோர் செய்திருந்தனர். உடற்கல்வித்துறை பேராசிரியர் முனைவர் சூர்யா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

நெல்லை மாவட்ட செய்தியாளர்
செ.பா.தவசிக்கனி/ எதிரொலி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed