மதுரையில் உள்ள தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள், தங்களின் அபார ஒருநிலைப்படுத்தும் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் நான்கு உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளனர்.

கிங்டம் வேர்ல்ட் ரெக்கார்ட் (Kingdom World Record) அமைப்பின் நேரடி கண்காணிப்பில் இந்த சாதனை முயற்சி நடைபெற்றது. மதுரையிலேயே முதல் முறையாக ஒரே இடத்தில் நான்கு விதமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டதாக சாதனை அமைப்பின் பிரதிநிதி செல்வராஜ் தெரிவித்தார்.

107 மாணவர்கள் ஒரு சிறிய டம்ளர் மீது ஏறி நின்று, ஒரு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி வியக்க வைத்தனர்...

எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி பயிலும் 3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அரை மணி நேரம் தொடர்ந்து புஜங்காசன நிலையில் நின்று சாதனை படைத்தனர். மாணவர்கள் கர்ணபீடாசன நிலையில் இருந்துகொண்டே அரை மணி நேரம் சிலம்பம் சுற்றி தங்களின் பன்முகத் திறமையை நிரூபித்தனர்.

இது குறித்து பள்ளி தாளார் பேசுகையில்:

குழந்தைகளின் மனதை ஒருநிலைப்படுத்துவதற்காகவும், அவர்களின் தனித்திறமையை வெளிக்கொணரவும் கடந்த 45 நாட்களாக தினமும் ஒரு மணி நேரம் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது. பெற்றோர்களின் பெரும் ஆதரவும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமே இந்த வெற்றிக்குக் காரணம்,” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

பயிற்சியாளர் ரமேஷ் மாஸ்டர் மாணவர்களை யோகா மற்றும் சிலம்பம் ஆகிய இரண்டிலும் பக்குவமாகத் தயார்படுத்தியதை கிங்டம் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு வெகுவாகப் பாராட்டியது. ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘நோபல் ரெக்கார்ட்’ செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் : காளமேகம் / மதுரை /எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed