கடலூர் மாவட்டம் பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம் மற்றும் கடலூர் மாவட்ட மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றங்கள் சார்பாக, ஆன்மீக குரு பங்காரு சித்தர் அவர்களின் திருஉருவ சிலைக்கும் மூன்று கால வேள்வி பூஜை சிறப்பாக செய்யப்பட்டது.

அதில், மேல் மருத்துவர் ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார் திருக்கரங்களால் விமான கோபுர கலசங்களுக்கு குடமுழக்க விழாவும், சக்தி பீட குடமுழக்க விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக, விதவிதமான விளை பொருட்கள் காய்கறிகள் முந்திரி பழங்கள் மற்றும் பல வகை பழங்களை கொண்டு திருஷ்டி கழிக்கப்பட்டு பின்னர், குருபீடத்தில் இருக்கும் அருள்மிகு ஆதிபராசக்திக்கு சிறப்பு அபிஷேகம் தொடர்ந்து மகா தேவார தன் நடைபெற்றது.

அதில், பண்ருட்டி சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஆதிபராசக்தி பக்தர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


எதிரொலி / 8939476777
