கிருஷ்ணகிரி அருகே அமைந்துள்ள, சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கால பைரவர் திருக்கோவிலில் நடைபெற்ற மஹாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மாணவிகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய ஏரிக்கரையில், சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கால பைரவர் திருக்கோவிலில், மஹாசிவராத்திரி விழா கடந்த மூன்று நாட்களாக பூஜைகள் வெகுவிமரிசையாக நடைபெற்று வந்தது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு நல்லிரவு முதல் தொடர்ந்து நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையின் போது, காலபைரவர் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும், அலங்கார கற்பூர தீபாராதணைகளும் நடைபெற்றது.

மஹா சிவராத்திரியையொட்டி, கிருஷ்ணகிரியை சேர்ந்த ஶ்ரீ சிவபால நாட்டிய பள்ளி மாணவிகளின் நாட்டியாஞ்சலி நிகழ்சியும் இதனைத் தொடர்ந்து, மகாபாரத சொற்பொழிவாளர் கோவிந்தராஜ் அவர்களின் இரவு முழுவதும் மஹா சிவராத்திரி குறித்த பக்தி சொற்பொழிவும் நடைபெற்றது,

இரவு முழுவதும் நடைபெற்ற மஹா சிவராத்திரி பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். பின்னர் சிறப்பாக நடனமாடிய நாட்டியாஞ்சலி மாணவிகளுக்கு கால பைரவர் திருக்கோவில் நிர்வாகிகள் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கால பைரவர் திருக்கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

கிருஷ்ணகிரி செய்தியாளர் : மாருதி மாணவன் எதிரொலி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed