திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கல்வி பயிலரங்கத்தின் போது அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் மகளிர் உதவித்தொகை 2,000 ஆக வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. கடந்த 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திருவண்ணாமலையில் இருந்து ஜோலார்பேட்டை செல்லும் ரயில்வே பாதையை அமைக்க வேண்டும்.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ள பருத்தியால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அதனை தடை செய்ய வேண்டும் நக்சலைட் என்பவர்கள் பழங்குடியினர்கள், மலைவாழ் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்காக போராடுவதாகவும் அவர்களை கொன்று விட்டு அமித்ஷா மார்தட்டி கொள்வதாகவும் குற்றச்சாட்டினார். மகளிர் உதவித்தொகை 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கூறிய நிலையில் திடீரென திமுக அரசு மகளிருக்கு 2,000 ரூபாய் உயர்த்தி வழங்கி கோடைகால தொகை என்ற முறையில் ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்தியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி 12,000 அல்ல 42 ஆயிரம் கூட தருவதாக கூறுவார்.

அதனை ஒடுக்கும் வகையில் அவர்கள் வீசும் அனைத்து பந்துகளையும் நாங்கள் சிக்ஸராக அடிப்போம் என்று கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் மேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பல்வேறு பதில்களை அளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் : செங்கம் செய்தியாளர் /S.குகன் 9043125758 8838114296
எதிரொலி / 8939476777
