மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பில், தேசிய அளவிலான துறைசார் உச்சி மாநாடு புதுடெல்லியில் இன்று மற்றும் நாளை (நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில்) நடைபெற்று வருகிறது. இந்த தேசிய உச்சி மாநாட்டில், தமிழ்நாடு அரசு சார்பாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி அவர்கள் பங்கேற்று உள்ளார்.

இந்த உச்சி மாநாட்டில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் தேவைக் குறைப்பிற்கான மறுசிந்தனை, எளிதில் அணுகக்கூடிய கல்வி உதவித்தொகைகள், ஆற்றல்மிக்க மாணவர் சமுதாயம், மாற்றுத் திறன் குழந்தைகளை ஆரம்ப நிலையில் கண்டறிதல் மற்றும் மாற்றுத் திறன் விளைவுகளை குறைத்தல், மற்றும் அனைவரும் அணுகத்தக்க வளர்ந்த பாரதம் ஆகிய நான்கு கருப்பொருட்களில் குழு அமர்வு மற்றும் பொதுக் கூட்ட அமர்வு வாயிலாக விவாதம் நடைபெற்று வருகின்றன.

இந்த உச்சி மாநாட்டில், தமிழ்நாட்டின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் போதை பொருள் தேவை குறைப்பிற்கான செயல் திட்டம் (போதையில்லா தமிழ்நாடு) ஆகியவற்றின் தற்போதைய நிலை, அவற்றை செயல்படுத்துவதில் உள்ள இடைவெளிகள் மற்றும் சவால்கள், சிறந்த நடைமுறைகள், பரிந்துரைகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் எடுத்துரைத்தார்.

அனைவருக்குமான சமூக நீதியை உறுதி செய்யும் வகையில் மாநிலங்களுக்கிடையே சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்காகவும் எதிர்கால திட்டங்களை வகுப்பதற்கும் இந்த உச்சி மாநாடு உதவிகரமாக இருக்கும்.

நாளை (19.11.2026), உச்சி மாநாட்டின் நிறைவு நாள் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். உச்சி மாநட்டில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர், மாநில அமைச்சர்கள். மத்திய சமூக நீதி அதிகாரமளித்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர்கள், மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளைச் சேர்ந்த மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் துறை அலுவலர்கள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

செய்திகள் : ராமகிருஷ்ணன் /எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed