திருவண்ணாமலை ஆதீனகர்த்தர் கருணாநிதி சுவாமிகள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள பாரம்பரியமான தீபத்தூணில் வருகின்ற கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்றுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பாரம்பரிய தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஐ கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு தடை கோரி முந்தைய ஆட்சியாளர்கள் தாக்கல் செய்த மனுவையும் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. எனவே தற்போது தீபம் ஏற்றுவதற்கு கோர்ட்டு தடை உத்தரவு எதுவும் இல்லை. கோர்ட்டு உத்தரவின் படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முதல்- அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

முதல்- அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று விஸ்வரூப தரிசனம் செய்த அவர், முதல்- அமைச்சரான பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்துள்ளார். மேலும் ஆந்திர மாநிலத்தில் உள்ள கனகதுர்கா அம்மன் கோவிலுக்கும் சென்றுள்ளார். எனவே இந்து மக்களின் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் மதித்து கோர்ட்டின் தீர்ப்பை ஏற்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பாரம்பரிய முறைப்படி கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முதல்- அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இந்து மக்களிடம் உள்ளது.

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வருகை தர உள்ள சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மழைக்காலச் சூழலைக் கருத்தில் கொண்டு மலை ஏறுவதற்குத் தடை விதித்திருப்பது பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாகும். மேலும் லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை, போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முன்னெச்சரிக்கையுடன் ஏற்பாடு செய்து வரும் தமிழக அரசின் நடவடிக்கைகளை பாராட்டுதலுக்கு உரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed