விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் நடந்த சூரசம்கார நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் விழாக்களில் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள் ஏழு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் ஆறாம் நாளில் சூரசம்காரம் கோலாகலமாக நடைபெறும் இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்வார்கள் அதே போல் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த வாரம் கோயிலில் கணபதி ஹோமத்துடன் கோலாகலமாக துவங்கியது கோயிலில் எழுந்தருளிய சுப்பிரமணியசாமிக்கு தினமும் சஷ்டி பாராயணம் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது சுவாமி ஒவ்வொரு நாளும் வள்ளி தெய்வானை தாயார்களுடன் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவின் ஆறாம் நாளான இன்று முக்கிய நிகழ்வான சூரசம்காரம் முத்தாலம்மன் திடல் மைதானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் நடைபெற்றது. காலையில் மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கும் வள்ளி தெய்வானை தாயார்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது விரதம் இருந்து காப்புக் கட்டிக் கொண்ட ஏராளமான பக்தர்கள் வெள்ளவிநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்தும் காவடிகள் எடுத்தும் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.

பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்களின் சஷ்டி பாராயணம் நிகழ்ச்சியும் சிறப்பு பூஜைகளும் நடந்தது.
பின்னர் மாலையில் நடந்த சூரசம்கார நிகழ்ச்சியில் பல்வேறு உருவத்தில் மாறி மாறி வந்த சூரபத்மனை முருகப்பெருமான் வேல் கொண்டு குத்தி அளித்தார். பக்தர்கள் கரகோஷம் எழுப்பியும் குலவையிட்டும் ஆரவாரம் செய்து செய்தனர். பின்னர் முருகப்பெருமானை அமைதி படுத்த சாந்தி பூஜைகள் முத்தாலம்மன் திடலில் வைத்து நடந்தது. அதன் பிறகு சாந்தமான முருகப்பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வத்திராயிருப்பு, கூமாபட்டி, தம்பி பட்டி, புதுப்பட்டி, சேது நாராயணபுரம், மகாராஜபுரம் உட்பட ஏராளமான கிராமங்களில் இருந்து பக்தர்கள் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777
