கிருஷ்ணகிரி மாவட்டம், கே.ஆர்.பி. அணை அருகிலுள்ள துவாரகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஆங்கிலக் கையெழுத்துத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 12 நாட்களாகச் சிறப்பு ஆங்கிலக் கையெழுத்துப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பின் நிறைவு நாளான இன்று, பயிற்சியைச் சிறப்பாக நடத்திய ஆசிரியர்களை பள்ளியின் தாளாளர் ஜி.ஜி. கோகுல் அவர்கள் பாராட்டிச் சிறப்பித்ததோடு மாணவர்கள் தங்களது கையெழுத்துத் திறனைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்ச்சிக்குப் பள்ளியின் முதல்வர்தி இந்திரா அவர்கள் மற்றும் செயலாளர் சிந்து அவர்கள் ஆகியோர் தலைமையில்12 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது ஆங்கிலக் கையெழுத்துத் திறனை மேம்படுத்திக் கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777
