சிவகங்கை மாவட்டம், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் பணிகளைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலினை இன்றையதினம் (12.11.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப்பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், அவர்கள் வெளியிட்டு தெரிவிக்கையில்
சிவகங்கை மாவட்டத்தில் 06.04.2026 அன்று சிறப்பு தீவிர திருத்தம் 2026 இறுதி வாக்காளர் பட்டியலின்படி 5,48,106 ஆண் வாக்காளர்களும், 5,71,186 பெண் வாக்காளர்களும் 43 மூன்றாம் பாலினம் வாக்காளர்களும் ஆக மொத்தம் 11,19,335 வாக்காளர்கள் இருந்தனர்.

27.03.2026 முதல் 24.10.2026 வரை நடைபெற்ற தொடர் திருத்தத்தின்போது, மொத்தம் 14,586 மனுக்கள் பெறப்பட்டு இதில் 14,487 மனுக்கள் அனுமதிக்கப்பட்டு 99 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
27.03.2026 முதல் 24.10.2026 வரை தொடர் திருத்தத்தின் போது 4,617 ஆண் வாக்காளர்களும், 6,204 பெண் வாக்காளர்களும் 5 மூன்றாம் பாலினம் வாக்காளர்களும் ஆக மொத்தம் 10,826 வாக்காளர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இத்திருத்தத்தின்போது 1,592 ஆண் வாக்காளர்களும் 2,067 பெண் வாக்காளர்களும் மற்றும் 02 மூன்றாம் பாலினம் வாக்காளர்களும் ஆக மொத்தம் 3661 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர் திருத்த காலத்தில் வாக்காளர் பட்டியல் விபரங்களை திருத்தம் செய்ய 13104 மனுக்கள் பெறப்பட்டு 12579 மனுக்கள் ஏற்கப்பட்டன 525 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

12.11.2026 அன்று வெளியிடப்படும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி நாளது தேதியில் 5,51,131 ஆண் வாக்காளர்களும் 5,75,323 பெண் வாக்காளர்களும் மற்றும் 46 மூன்றாம் பாலினம் வாக்காளர்களும் ஆக மொத்தம் 11,26,500 வாக்காளர்கள் உள்ளனர்.
வ. எண் சட்டமன்ற தொகுதியின் எண் & பெயர் 12.11.2026- வரைவு வாக்காளர் பட்டியலின்படி வாக்காளர்கள் விபரம்
ஆண் பெண் மூன்றாம் பாலினம் மொத்தம்

  1. 184-காரைக்குடி 150162 / 157807 30 307999
  2. 185-திருப்பத்தூர் 136296 141573 3 277872
  3. 186-சிவகங்கை 136867 143245 4 280116
  4. 187-மானாமதுரை 127806 132698 9 260513
    மொத்தம் 551131
    575323
    46
    1126500

சிவகங்கை மாவட்டத்தில் வாக்குச்காவடிகள் மறுசீரமைப்பிற்கு முன்னர் 1518 வாக்குச்சாவடிகள் இருந்தன. மறுசீரமைப்பிற்கு பின் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 1519 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பதிவுகளைத் திருத்தம் செய்தல் ஆகிய பணிகள் தொடர்பாக 12.11.2026 முதல் 11.12.2026 வரை மனுக்கள் பெறப்படும். மனுக்களை அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் நேரடியாகவோ அல்லது https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

21.11.2026, 22.11.2026, 28.11.2026 மற்றும் 29.11.2026 ஆகிய நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
பொதுமக்கள் தற்போது

வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், பெயர்கள் விடுபட்டிருப்பின் புதிதாக சேர்த்துக்கொள்ளவும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் இருப்பின் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் இருப்பின் திருத்தம் செய்யவும். தங்களது குடும்பத்தில் காலஞ்சென்ற நபர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பின் அவர்களது பெயர்களை நீக்கவும் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.விஜயகுமார், உதவி ஆணையர் கலால் திரு.சிவபாலன், தேர்தல் வட்டாட்சியர் திரு.மேசியதாஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் : ஆனந்த் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed