முன்னாள் அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், ராபர்ட் புரூஸ் எம்.பி., ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்!


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் வி.பி.துரை பரிந்துரையின் பெயரில் காங்கிரஸ் கட்சியின் நாங்குநேரி ஒன்றியத் தலைவராக த.வின்சென்ட் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் ப.மாணிக்கம் தாகூர் எம்.பி., மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் நாங்குநேரி ஒன்றியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள த.வின்சென்ட் குமார், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் வி.பி.துரை, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் சி.ராபர்ட் புரூஸ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

மேலும் நாங்குநேரி ஒன்றிய காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள த.வின்சென்ட் குமாருக்கு நெல்லை கிழக்கு மாவட்டப் பொருளாளர் இட்டமொழி ஜெ.நம்பித்துரை, மாவட்டத் துணைத் தலைவர் பரப்பாடி டி.பத்மசிங் செல்வமீரான், நாங்குநேரி நகரத் தலைவர் பி.சுடலைக்கண்ணு மற்றும் மண்டலத் தலைவர்கள் தோட்டாக்குடி கே.அம்புரோஸ், முனைஞ்சிப்பட்டி ஜே.அமலதாஸ், இராமகிருஷ்ணாபுரம் வி.செல்வின், இட்டமொழி எல்.ரமேஷ் கிருஷ்ணன், விஜயநாராயணன் எம்.வடிவேல், இளவன்குளம் எஸ்.நிக்சன் ஞானசிங், இறைப்புவாரி ஜி.சாலமோன் ராஜா, மறுகால்குறிச்சி எஸ்.செல்லப்பாண்டி, தளபதிசமுத்திரம் டி.அப்பாதுரை, தெற்கு நாங்குநேரி பி.சுந்தர், உன்னங்குளம் எஸ்.வெனிஸ் ராஜா உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

செய்தியாளர் செ.பா.தவசிக்கனி
எதிரொலி.இன் / நெல்லை மாவட்டம்.
கைபேசி எண்: 8825850212.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed