கடந்த ஆண்டு முதல் நண்பர்களும், பொதுமக்களும், உறவினர்களும் தங்களது பங்கிற்கு ஒரு தொகையை வழங்கி உதவி செய்கின்றனர்.
வேதாரணியம் வட்டாரத்தில் உள்ள 36 ஊரராட்சிகளிலும் உள்ள தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், தோட்டம் பராமரிப்பவர்கள், வேதாரணியம் நகராட்சியில் பணிபுரிகின்ற தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேற்பார்வையாளர்கள், குப்பை வண்டிகளை இயக்குபவர்கள், நகரில் உள்ள சுமைதூக்கும் தொழிலாளர்கள் (லோடுமேன்), இடும்பாவனம், கரியாப்பட்டினம், செம்போடை, தோப்புத்துறை, வேதாரணியம், கொடியகரை, ஆயக்காரன்புலம் ஆகிய ஊர்களை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கூர்காசுகள், அவர்களது குடும்பத்தினர்கள், அம்மா உணவகங்களில் பணிபுரியும் சேவை மகளிர்கள், நாடோடிகள், மனநிலம் மாறுபட்டவர்கள், வீதியோரவாசிகள் என ஆயிரம் பேருடன் தீபாவளி கொண்டாடப்பட்டது.
நலிந்தவர்களுடன் தீபாவளி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்ட இடங்கள்:-
வேதாரணியம் பயணியர் மாளிகை சாலை,நகராட்சி வளாகம், இராஜாஜி பூங்கா, அண்ண அரங்கத்திலும், ஆயக்காரன்புலம், வாய்மேடு காவல்நிலையம் அருகில், இடும்பாவனம் .

வழங்கப்பட்ட பரிசு தொகுப்பு :-
பயனாளிகள் அனைவருக்கும் கைலி, டி-ஷர்ட், துண்டு, கால்சட்டை, மேல்சட்டை, புடவை, நைட்டி, பட்டாசு மத்தாப்பு, புதைவானம், இனிப்பு பொட்டலம், காரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் பாட்டில், நல்லெண்ணெய்ப் பாட்டில், சீகைக்காய், இட்லி பொட்டலம் ஆகியன அடங்கிய தொகுப்புபை ஒன்று வழங்கப்பட்டது
