மதுரை சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து மதுரை மாநகர பகுதிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் பால் பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டு விற்பனை நடைபெற்றுவருகிறது

பால்பண்ணையில் இருந்து லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலமாக ஆங்காங்கே பால் டெப்போக்ககளுக்கு மற்றும் ஆவின் பால் விற்பனை நிலையங்களுக்கு பால் விநியோகம் செய்யப்படும். இந்த நிலையில் மதுரை டிவிஎஸ் நகர் ,அழகப்பன் நகர் பழங்காநத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விநியோகம் செய்யக்கூடிய லாரி ஓட்டுநர்கள் விடுமுறை எடுத்த நிலையில் அந்த பகுதிகளுக்கான பால் விநியோகம் செய்யப்படாமல் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது

இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றம் அடைந்த நிலையில் தனியார் பால் பாக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர். இது போன்று பகுதிகளுக்கு பால் விநியோகம் செய்யும் ஓட்டுநர்கள் விடுமுறை எடுத்திருந்தால் மாற்று ஏற்பாடு செய்யாத நிலையில் தான் பொதுமக்கள் ஆவின் பால் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed