​
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் நகரில், மக்கள் அனைவரும் மன மகிழ்ச்சியோடு தீபாவளித் திருநாளைக் கொண்டாட ஆயத்தமாகி வந்த வேளையில், நகரில் அரங்கேறிய வெறி நாய்க்கடி சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

​வாலாஜாபாத் நகரத்தில் ஐயப்பன் கோவில் தெரு மற்றும் வி.வி. கோவில் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் சுற்றி வந்த வெறிநாய் ஒன்று, அந்த வழியாகச் சென்ற பொதுமக்களைத் திடீரெனத் கடித்துக் குதறியது.

இந்த எதிர்பாராதத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தீபாவளி பண்டிகை நாளில் அடுத்தடுத்து பலர் நாய் கடியால் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் பீதியையும் உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், “முக்கியமான தெருக்களில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. அந்த வழியாகச் செல்லும் குழந்தைகளும், பெண்களும் மிகுந்த அச்சத்துடனேயே நடந்து செல்ல வேண்டியுள்ளது.

எனவே, அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன், பேரூராட்சி நிர்வாகமும் தூய்மைப் பணியாளர்களும் உடனடியாகத் தலையிட்டு அந்த வெறிநாயைப் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed