பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில்,மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (ICAR-CIBA), 2026 நவம்பர் 1 முதல் 15 வரை ‘பழங்குடியினர் பெருமை தினத்தை’க் கொண்டாடி வருகிறது. “பழங்குடியின மீனவர்களுக்கு அதிகாரமளித்தல், நிலைத்த மீன்வளம், அனைவரையும் உள்ளடக்கிய வாழ்வாதாரங்கள்” என்பதே நடப்பாண்டின் கருப்பொருளாகும்.
இதன் ஒரு பகுதியாகதிருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு,செஞ்சியம்மன் பழங்குடியினர் கிராமத்தில் இருளர் சமூகத்தினருடன் CIBA சார்பில் பழங்குடியின பயனாளிகள் சந்திப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
​

இந்நிகழ்ச்சியில் சமூக விழிப்புணர்வுக் கூட்டங்கள்,கலை நிகழ்ச்சிகள் மற்றும் குறும்படத் திரையிடல் ஆகியவை இடம்பெற்றன. ICAR-CIBA முதன்மை விஞ்ஞானி டாக்டர் பி.சாந்தி மற்றும் அவரது குழுவினரால் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாட்டின் பூர்வ பழங்குடியின மக்கள் – உவர்நீர் மீன்வளர்ப்பு மற்றும் வேளாண் சார்ந்த தொழில்நுட்பத் தலையீடுகள் மூலம் அவர்களின் வாழ்வாதார மேம்பாடு” என்ற குறும்படம் திரையிடப்பட்டது. இம்முயற்சியில் சுமார் 200 பழங்குடியினர் விவசாயிகள் பங்கேற்றுப் பயனடைந்தனர்.
​உவர்நீர் தொழில்நுட்பங்கள் மற்றும் வெற்றி கதையாக​உள்ளூர் வளங்களுக்கு ஏற்ற வாழ்வாதார வழிகளாகப் பால்கெண்டை மீன், கொடுவா மீன் வளர்ப்பு, நண்டு வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் மீன் தீவனம் தயாரித்தல் உள்ளிட்ட உவர்நீர் தொழில்நுட்பங்களை ICAR-CIBA ஊக்குவிக்கிறது. இது குறித்த பயிற்சி மற்றும் தொழில் முறைகள் இந்த பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியினை lCAR-CIBA இயக்குநர் டாக்டர் எம். கைலாசம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், முதன்மை விஞ்ஞானி டாக்டர் பி. சாந்தி,சாய்ராம், டாக்டர் எம். பூர்ணிமா, டாக்டர் வித்யாடாக்டர் சி. வி.டாக்டர் ஆனந்தராஜா, ஆர்.,செல்வி ஸ்வேதா, திரு. ராகுல் மற்றும் நிறுவனக் குழுவினர் வெற்றிகரமாக ஒருங்கிணைத்தனர்.

செய்திகள் : பழவை முத்து எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed