ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் பொதுமக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் விதமாக வெற்றி சிறப்பு காய்கறிகள் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடங்கி வைத்தார்.
இந்த வெற்றி சிறப்பு காய்கறி திட்டத்தில் ஒரு தேங்காய், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், எலுமிச்சை, இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளது. குடும்ப தலைவிகள் இத்தகைய பொருட்கள் வாங்குவதற்கு 250 முதல் 300 ரூபாய் வரை செலவாகும் எனவும் இத்தகைய திட்டத்தின் மூலம் காய்கறிகள் வழங்கி உள்ளது.பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அப்பொழுது கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பயனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777
