கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் திமுக அரசினை கண்டித்து அதிமுக கூட்டணி கட்சி சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக அரசினை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில்
125 நாள்கள் வேலை திட்டத்தினை நசுக்கும் விதமாக செயல்படும் தமிழக அரசினை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள். மேலும் இதே போல பர்கூர், ஊத்தங்கரை, சூளகிரி, ஓசூர், ஊத்தங்கரை என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட செயலாளர் காத்தவராயன், நகர செயலாளர் கேசவன், தங்கமுத்து, மாவட்ட மகளீர் அணி செயலாளர் கல்பனா, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் பரிதாநவாப், எம்.ஜி. ஆர். மன்ற இணைச் செயலாளர் சின்னதம்பி மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர்களான சோக்கடி ராஜன், கண்ணியப்பன், சூர்யா, அஜி, கார்த்திக் பால்ராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்.

கிருஷ்ணகிரி செய்தியாளர் : மாருதி – மனோ / எதிரொலி / 8939476777
