​மதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரவை பேரூராட்சி வார்டு பகுதியில், சுமார் 45 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு துணை சுகாதார நிலைய கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இவ்விழாவில் தமிழக எரிசக்தி மற்றும் மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார். இந்நிலையில், இந்த புதிய மருத்துவமனைக்குச் செல்லக்கூடிய முக்கிய சிமெண்ட் சாலை நீண்டகாலமாக குண்டும் குழியுமாகவே இருந்து வந்துள்ளது.

பல மாதங்களாக இந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தவர் நிலையில் பேரூராட்சி நிர்வாகம் அது குறித்து கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது இந்த நிலையில், இன்று அமைச்சரின் வருகையை முன்னிட்டு, அவசர அவசரமாக பேரூராட்சி பணியாளர்கள் சாலை ஓரத்தில் கிடந்த மண்ணை அள்ளி வந்து குழிகளில் கொட்டி மூடிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

​அதுமட்டுமன்றி, மருத்துவமனையைச் சுற்றியுள்ள கழிவுநீர் கால்வாய்களும், அமைச்சர் பார்வையிடும் பகுதியில் மட்டும் பெயரளவில் அவசர அவசரமாக கைகளில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வெற்று கைகளால் சுத்தம் செய்தனர். அமைச்சரின் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக, பேரூராட்சி சாலைகளை முறையாக சீர் செய்யாமல் மண்ணைக் கொட்டி குழிகளை மூடிய இந்த “பேச் ஒர்க்” நடவடிக்கை குறித்து அப்பகுதி பொதுமக்கள் கடும் கொந்தளிப்பும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

​தினமும் நோயாளிகளும் பொதுமக்களும் பயன்படுத்தும் சாலைக்கு நிரந்தர தீர்வு காணாமல், அமைச்சர் வருகைக்காக மட்டும் இப்படி ஒரு தற்காலிக நாடகத்தை நடத்துவது நியாயமா?” என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி சென்றனர் அமைச்சர் வந்து சென்ற பிறகாவது சாலையை முறையாக சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed