மின்சாரத்துக்கு முன்னாள் முதலமைச்சர் சாமி கும்பிடுறாரா, யாராவது மந்திரி சாமி கும்பிடுறாரானு எப்படி தெரியும்.முன்னாள் முதலமைச்சர் சாமி கும்பிடுறாருன்னா பயந்துகிட்டு திருப்பி டக்குனு போன மின்சாரம் வந்துருமா, முன்னாள் முதலமைச்சர் சாமி கும்பிடுறதுக்கும், மின் தடைக்கும் சம்மந்தம் கிடையாது.-காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசு பேட்டி

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் சென்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக காங்கிரஸ் கட்சி முன்னால் மாநிலத் தலைவரும் பேசிய செயலாளருமான திருநாவுக்கரசு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

அரசியல், ஆன்மீகம் இரண்டையும் இரு கண்களாக பாவித்து, தமிழகத்திலே மிகப்பெரிய செல்வாக்குள்ள முன்னணி தலைவராக, மூத்த தலைவராக, நாடாளுமன்ற தேர்தல்களில் வாக்கு கேட்காமலேயே வெற்றி பெறக்கூடிய செல்வாக்குள்ள தலைவராக, சுதந்திர போராட்டத்திலே பங்கேற்ற தலைவராக, பத்தாண்டு அளவுக்கு மேலாக சிறையிலிருந்து வாடிய தலைவராக, பரிபூரண பிரம்மச்சாரியாக, தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சமூக நீதிக்காகவும், ஏழை எளிய மக்களுடைய நல்வாழ்வுக்காகவும் அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட்ட அரும்பெரும் தலைவர் அமரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுடைய பிறந்தநாள் நினைவுநாளை ஒட்டி இன்று காங்கிரஸ் சார்பிலே அவர் வாழ்ந்த இடத்திலே, நினைவகத்திலே மலரஞ்சலி செலுத்தி வீர வணக்கம் செலுத்தியுள்ளோம். அவருடைய புகழ் என்றென்றும் வாழ்க என காங்கிரஸ் சார்பிலே பிரார்த்திக்கிறோம், வாழ்த்துகிறோம். 

மதுரை திருநகர் முத்துராமலிங்க தேவர் மறைந்த இல்லத்தை மணிமண்டபம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு

மதுரையிலதான் நீண்ட காலம் அவர் வாழ்ந்த இடம் அது. அந்த அந்த இடத்துல வந்து அமரர் பசும்பொன் தேவர் அவர்களுடைய நினைவை பாதுகாக்கிற விதத்திலே ஒரு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வருகிறது என்பது உண்மைதான். 

இதை இப்போது இருக்கிற அரசு, அதனுடைய தலைவராக இருக்கக்கூடிய முதலமைச்சர் மாண்புமிகு திரு. விஜய் (மு.க. ஸ்டாலின் )அவர்கள் கனிவோடு பரிசீலித்து செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அதுபோல, பேரறிஞர் காமராஜர், அண்ணா, அப்புறம் எம்.ஜி.ஆர். ஆகியோருக்கு ரயில் நிலையங்கள், விமான நிலையங்களிலே ஏற்கனவே பெயர் சூட்டப்பட்டு நினைவாக வைக்கப்பட்டுள்ளது.அதுபோல பத்தாண்டு அளவுக்கு மேலாக சுதந்திரத்துக்காக பாடுபட்ட, சிறையிலிருந்து வாடிய ஒரு தியாக தலைவராக, ஏராளமான நிலங்களை ஜாதி, மத பாகுபாடு இல்லாமல் ஏழைகளுக்கும் பிரித்துக் கொடுத்து, ஒரு மனிதநேயராக வாழ்ந்த அமரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவருடைய பெயரை மதுரையிலே விமான நிலையத்திற்கு சூட்டுவது பொருத்தமாக இருக்கும் இதற்காக அப்போதும் போதிருந்த எல்லா முதலமைச்சருமே, எல்லா ஆட்சியிலுமே அதற்கான வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார்கள் அதை இப்போது இருக்கிற தமிழக அரசு, திரு. விஜய் அவர்களுடைய தலைமையில் இருக்கிற அரசு, மத்திய அரசை வலியுறுத்தி, பெயர் சூட்ட வேண்டும், முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நானும் மத்தியிலே சிவில் துறையில் அமைச்சராக இருக்கக்கூடிய ராம்மோகன் அவர்கள் என்னுடைய என்னுடைய தந்தை என் நண்பர்தான் டெல்லி போகும்போது அவரை சந்தித்து நானும் அவரிடத்திலே இந்தக் கோரிக்கையை வற்புறுத்துவேன்.

தேனியில் கைதிகள் சிறையில் இருந்து தப்பியது குறித்த கேள்விக்கு:

இது வந்து ஒரு ஒரு அன்ஃபார்சுனேட், துரதிஷ்டவசமான ஒரு சூழல்தான். 
இது இந்த நிகழ்ச்சி வந்து ஒரு வருத்தப்படக்கூடிய, கண்டிக்கக்கூடிய நிகழ்ச்சிதான். இதுபோல சம்பவங்கள் நடக்காத விதத்திலே தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சிறைத்துறைக்கு அதிகாரியாக இருந்த தலைமை அதிகாரியை முதலமைச்சர் இப்போது மாற்றி புதிதாக தலைவர் நியமித்திருக்கிறார். தொடர்ந்து அவர்கள் சீர் சீர்திருத்தக் கூடிய சூழ்நிலை ஏற்படும், சீர் செய்வார்கள் என நம்புகிறேன், சீர் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

ஆனால் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் வந்து முதல் முறை என்று சொல்ல முடியாது ஏற்கனவே நடந்திருக்கு, ஏற்கனவே வந்து செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது கூட 95-ல வேலூர் சிறையிலிருந்து 40-க்கும் மேற்பட்டவர்கள் தப்பி போயிருக்காங்க. அங்கமுங்குமாக இந்த மாதிரி சில சம்பவங்கள் நடந்திருக்கு. அதுபோல இப்போ நடந்திருக்கு, அதனால எப்போ நடந்துச்சு, இப்போ நடந்துச்சுன்னு சொல்ல முடியாது

ஆனால் இதுபோல சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கக்கூடிய விதத்திலே உரிய சீரிய நடவடிக்கைகளை விஜய் அவர்களுடைய தலைமையில் இருக்கிற இந்த அரசாங்கம் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

மீனாட்சி அம்மன் கோவில்ல முன்னாள் முதல்வர் எடப்பாடி சாமி கும்பிடுறப்போ மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு:

மின்சாரத்துக்கு முன்னாள் முதலமைச்சர் சாமி கும்பிடுறாரா, யாராவது மந்திரி சாமி கும்பிடுறாரானு எப்படி தெரியும்
அதனால யார் மின்சார மின் தடை ஏற்பட்டிருக்கு அங்க இங்கம்மா? ஏற்பட்டிருக்கு, அவர் சாமி கும்பிடும்போதும் ஏற்பட்டிருக்கு
அவரும் வந்து முன்னாள் முதலமைச்சர் சாமி கும்பிடுறாருன்னா பயந்துகிட்டு மின்சாரம் திருப்பி டக்குனு போன மின்சாரம் வந்துருமா, முன்னாள் முதலமைச்சர் சாமி கும்பிடுறதுக்கும், மின் தடைக்கும் சம்மந்தம் கிடையாது மின் தடை என்பது இந்த அரசாலே உண்டாக்கப்பட்டதல்ல அதற்கு காரணம், இப்போ இருக்கிற எவ்வளவு பற்றாக்குறை இருக்கு, மின்சாரம் என்ன தேவைங்கிறதை, மட்டுமல்லாமல் அடுத்த வருஷம், அடுத்த வருஷம், அடுத்த வருஷம், அஞ்சு ஆண்டு கழித்து எவ்வளவு மின்சாரம் தேவைக்கு இருக்கிறதுக்கு திட்டமிட்டு ஒரு அரசாங்கம் செயல்படணும்.

முன்னால் இருந்த அரசாங்கங்கள் அப்படி திட்டமிட்டு செயல்பட்டிருந்தால், இப்ப வந்து மின்பற்றாக்குறை இருக்காது.
மின்பற்றாக்குறைங்கிறது திடீரென்று தோன்றியது அல்ல, திடீர்னு வர்றது இல்ல பற்றாக்குறை இப்ப வீடுகளுக்கு எவ்வளவு வேணும், தொழிற்சாலைகளுக்கு எவ்வளவு வேணும், இப்ப ஸ்ட்ரீட் லைட்டுக்கு எவ்வளவு வேணும், மொத்த உற்பத்தி என்ன, மொத்த எவ்வளவு உபயோகம் இருக்கு, உபயோகம் எவ்வளவு ஆகுது

இதை கணக்கிட்டு ஒவ்வொரு அரசாங்கமும் தொலைநோக்கு திட்டத்தோடு செயல்படுத்தணும் அப்படி முன்னால் இருந்த அரசாங்கங்கள் செய்யாததால ஏற்பட்ட ஒரு பற்றாக்குறை அல்லது குறையைத் தவிர, அதுக்கு இப்ப இருக்கிற முதலமைச்சரோ, இப்ப இருக்கிற அரசாங்கமோ அது காரணமல்ல. ஒரு நாலு வருஷம் கழிச்சு, அஞ்சு வருஷம் கழிச்சு இதே மாதிரி சூழ்நிலை இவர்கள் சீர் செய்யாமல் இருந்தா, இப்ப இருக்கிற அரசாங்கத்தை குற்றம் சொல்லலாம். 

மின்தடைக்கு மின் ஊழியர்கள் சிலர் தான் காரணம் என அமைச்சர் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:

மின்பற்றாக்குறை ஏற்படுவதற்கு அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. 
இந்த மாதிரி பல காரணங்கள் இருக்கு. நான் சொல்வது முன்னால அதுக்காக திட்டமிட்டு செயல்படாதனால ஏற்பட்ட பற்றாக்குறை என்று சொல்கிறேன்.
அவர் சொல்ற மாதிரி அது ஒரு காரணமாகவும் இருக்கலாம்.

விலைவாசி உயர்வு குறித்த கேள்விக்கு:

பத்து ரூபா மதுபானத்திற்கு விலை உயர்த்தினால் விற்பனை கூடுமா குறையுமா என எனக்கு தெரியாது. ஒருவேளை பத்து ரூபாய் உயர்த்துவதால் குறைய கூட செய்யலாம். விலை உயர்வு என்பது மாநில அரசு கட்டுப்பாட்டில் மட்டுமில்லை. கத்திரிக்காய் வாழக்காய் மாநில அரசு கட்டுப்பாடு. ஆனால் கேஸ் பெட்ரோல் டீசல் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசு மாநில அரசும் இணைந்து செயல்படுத்தக்கூடிய பிரச்சனை அது. இருவரும் இணைந்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

முதல்வர் ஆரம்பத்தில் மத்திய அரசை அதிகம் விமர்சித்தார் தற்போது விமர்சிக்கவில்லை என்பது குறித்த கேள்விக்கு:

அது அவர் ஒரு அரசாங்கம் நடத்துறாரு, அவர் ஒரு கட்சி நடத்துறாரு. அவர் என்னவெல்லாம் பேசணும், என்னவெல்லாம் சொல்லணும்னு மத்த கட்சிகள் வந்து பாடம் எடுக்க முடியாது அவருக்கு அவர் கொள்கை ரீதியா பிஜேபியை எதிர்க்கணும்னு சொல்றாரு, அவ்வளவுதான்
தினம்தினம் பிஜேபியை திட்டிட்டு இருக்கணும் அல்லது தினம்தினம் பிரதமரை திட்டிட்டு இருக்கணும்னு அவசியமில்லையே.

முன்னால இருந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் எல்லாம், கலைஞர் ஆகட்டும் எல்லாருமே வந்து கண்டிக்கிற நேரத்துல கண்டிச்சிருக்காங்க, ஆதரவு கொடுக்கிற நேரத்துல ஆதரவும் கொடுத்திருக்காங்க.
உண்ணாவிரதம் இருக்க வேண்டிய நேரத்துல உண்ணாவிரதம் இருந்திருக்காங்க, அனுசரிச்சு போற நேரத்துல அனுசரிச்சு போயிருக்காங்க.

இதே குற்றச்சாட்டு எம்.ஜி.ஆர் மேல கூட அவர் மத்திய அரசுக்கு எல்லாம் பயப்படுறாருன்னு சொன்ன காலம் எல்லாம் இருந்தது. ஆனா அவர் யாருக்கும் பயந்தது கிடையாது.
ஆனா, ஒரு 12 லட்சம் கோடி கடன் இருக்கிற ஒரு மாநிலத்திலே, பல்வேறு திட்டங்களை அறிவிச்சிருக்கிற ஒரு அரசாங்கம், மத்திய அரசுடைய நிதி ஆதாரங்களை பெறாமலோ, தினம் மத்திய அரசோட சண்டை போட்டுகிட்டோ, தமிழ்நாட்டில் பெரிய வளர்ச்சி பணிகளை செய்ய முடியாது.

அதனால தமிழ்நாட்டின் நலன் கருதியும், மத்திய அரசோடு பல்வேறு விஷயங்கள்ல அனுசரிச்சு போறதுல தப்பு கிடையாது. கொள்கை ரீதியாக அவர் சொன்ன மாதிரி எனக்கு கொள்கை எதிரி பிஜேபினு, ஆர்எஸ்எஸ் சொல்லியிருக்காரு. அந்த மாதிரி கொள்கை விஷயங்கள்ல காம்ப்ரமைஸ் (Compromise) பண்ணா அதை கண்டிக்கலாம் என திருநாவுக்கரசர் கூறினார்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed